புதுச்சேரி: புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச அருங்காட்சியக நாள் விழா, கண்காட்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மே 18-ம் தேதி அருங்காட்சியங்களில் சர்வதேச அருங்காட்சியக நாள் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி புதுச்சேரி மரபுரிமை-துறைமுகம் முதல் கோட்டை வரை என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி அரசு அருங்காட்சியகத்தில் தொடங்கியது.
கலைபண்பாட்டுத் துறை இயக்குநர் அ.கணேசன் தலைமை தாங்கினார். தாகூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் சசிகாந்த தாஸ் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். கி.மு.600 ம் ஆண்டு தொடங்கி இன்றைய புதுவை வரை உள்ள காட்சிகளை புகைப்படங்களின் மூலமும், பலவிதமாக மாதிரிகள் மூலமும் புதுவையின் வரலாறு விளக்கப்பட்டிருந்தது.
தாகூர் அரசு கலைக் கல்லூரியின் வரலாற்று பேராசிரியர் ரவிச்சந்திரன் தான் சேகரித்து வைத்திருந்த மாதிரிகளையும், புகைப்படங்களையும், ஓவியங்களையும் கண்காட்சியில் பார்வைக்காக வைத்திருந்தார். அதில் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் இருந்து அரிக்கன்மேடு துறைமுகத்துக்கு பொருள்கள் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட வழித்தடம், பல்வேறு பகுதிகளில் கிடைத்த பழமையான அரிய பொருள்கள், 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புதுவை எவ்வாறு இருந்தது, பிரெஞ்சு காலத்தில் புதுவை இருந்த நிலை, தற்போதுள்ள நிலை குறித்த புகைப்படங்கள் மூலம் விளக்கி இருந்தார்.
மேலும் அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல்பொருள்களும் இதில் வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவியர் கண்காட்சியைக் கண்டு களித்தனர். இக்கண்காட்சி வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.
மேலும் அப்போது அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியக நூலகமும் வாசகர்கள் மாணவர்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டிருந்தது. இதில் வரலாறு, தொல்பொருள், பழங்கால ஓவியங்கள், தொன்மையான கட்டட வடிவமைப்பு தொடர்பாக அரிய புத்தகங்கள் உள்ளன
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.