மீண்டும் மீண்டும் நெட்டிசன்களின் வலையில் சிக்கும் தமிழக அமைச்சர்!

நாங்கள் பொய்தான் சொன்னோம் என்றும்,  பாரத பிரதமர் மோடி என்று கூறுவதற்கு பதிலாக பாரத பிரதமர் மன்மோகன் சிங் என்று
மீண்டும் மீண்டும் நெட்டிசன்களின் வலையில் சிக்கும் தமிழக அமைச்சர்!
Updated on
1 min read

திண்டுக்கல்:  நாங்கள் பொய்தான் சொன்னோம் என்றும்,  பாரத பிரதமர் மோடி என்று கூறுவதற்கு பதிலாக பாரத பிரதமர் மன்மோகன் சிங் என்று கூறியும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அமைச்சர் திண்டுகல் சீனிவாசன் மீண்டும் வாய் குளறி பாரத ரத்னா எம்.ஜி.ஆர் என்பதற்கு பதில் பாரத பிரதமர் என்று கூறி நெட்டிசன்களின் கேலிக்கு ஆளாகியுள்ளார். 

இன்று திண்டுக்கல்லில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, எம்எல்ஏ விபிபி பரமசிவம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஆரம்பத்திலேயே பாரத பிரதமர் என்று ஆரம்பித்தார். 

பின்னர் சமாளித்து பாரத ரத்னா எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது என்று கூறினார். பின்னர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் அனைவருக்கும் மேற்படி எல்லாம் இருக்கு என்றும் கூறினார். மேற்படி என்று அமைச்சர் எதை கூறுகிறார் என கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com