தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கவிஞர் இன்குலாப், யூமா வாசுகி ஆகியோருக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு

கவிஞர்கள் இன்குலாப், யூமா வாசுகிக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

News image
Updated On :21 டிசம்பர் 2017, 10:48 am

கவிஞர்கள் இன்குலாப், யூமா வாசுகிக்கு சாகித்ய அகாதெமி  விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

ழக்கரையில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் இன்குலாப். இவரது இயற்பெயர் சாகுல்ஹமீது. மதுரை தியாகராஜர் கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்த இன்குலாப், படிப்பு முடித்து சென்னை புதுக்கல்லூரியில் பணிபுரிந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், நா.காமராசன் போன்ற தன்னுடன் படித்த நண்பர்களுடன் சேர்ந்து காத்திரமாகப் போராடியவர். தி.மு.க ஆதரவாளராக இருந்தவர், பிறகு மார்க்சிய சித்தாந்தத்தில் இயங்கினார்.

கீழ்வெண்மணியில் 44 தலித் மக்கள் எரிக்கப்பட்டபோது வெகுண்டெழுந்து அவர் இயற்றிய கவிதைகள், ஒடுக்கப்பட்ட மற்றும் உழைக்கும் மக்களுக்கு இன்று வரை புரட்சிகீதமாக முழங்குகிறது. எப்போதும் தான்கொண்ட கொள்கையில் சமரசமின்றி வாழ்ந்தவர். `பலகாலமாக நீதி, நெறி என நம்மிடையே சாஸ்திரங்கள் வழியாகவும், கல்வியின் வழியாகவும் புகுத்தப்பட்ட `துருப்பிடித்த குப்பைகளை' நாம் களைய முற்பட வேண்டும்' என முற்போக்குக் கருத்துகளை மேடைகளில் அழுத்தத்துடன் எடுத்துரைத்தவர். அவர் எழுதிய  காந்தள் நாட்கள் கவிதை தொகுப்புக்காக  கவிஞர் இன்குலாப்புக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கசாக்கின் இதிகாசம் மலையாள நூல் மொழிபெயர்ப்புக்காக யூமா வாசுகிக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.