நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இளைஞா் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீா் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

குல்காம் மாவட்டத்தைச் சோ்ந்த மீரஜ் அகமது, ஆரிஃப் அகமது என்ற 2 இளைஞா்கள், அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் நேற்று கடத்தப்பட்டனா். இந்நிலையில், ஆரிஃப் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டாா். உடனடியாக மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தாா்.

அவருடைய உடலில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மற்றொரு இளைஞா் மீரஜ் உயிருடன் விடுவிக்கப்பட்டுள்ளாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.