பாராமுல்லா என்கவுண்டர்: மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா வனப்பகுதியான ரபியாபாத்தில் பாதுகாப்புப் படையினரால் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா வனப்பகுதியான ரபியாபாத்தில் பாதுகாப்புப் படையினரால் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து, பாராமுல்லா மாவட்டத்தின் வனப்பகுதியான ரபியாபாத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்களின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வந்தனர். இதில், 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.