மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திட்டமிட்டபடி ஜூன் 12-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு: வெள்ளை மாளிகை அறிவிப்பு 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ம்

News image
Updated On :5 ஜூன் 2018, 2:50 pm

DIN

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும், வட கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா - தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.
ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சந்திப்பு சம்பந்தமான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசுவதற்காக வடகொரிய அதிபரின் உதவியாளர் கிம் யாங் சோல் நேற்று அமெரிக்கா சென்றார். டிரம்பை சந்தித்த அவர், கிம் ஜாங் உன் சார்பில் ஒரு கடிதத்தையும் அவரிடம் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடிகளினால், இந்த சந்திப்பு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், வட கொரிய அதிபருடனான சந்திப்பு குறித்த தகவல்களை அதிபர் டிரம்ப் ஒவ்வொரு நாளும் தேசிய பாதுகாப்பு குழுவினரிடம் இருந்து பெற்று வருகிறார். ஜூன் 12-ம் தேதி இருநாட்டு அதிபர்களும் சிங்கப்பூரில் காலை 9:00 மணிக்கு சந்திக்க உள்ளனர் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.