நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தொடந்து 8 நாட்களாக குறைக்கப்பட்டு வந்த பெட்ரோலின் விலை 1 ரூபாய் கூட குறையாத அவலம்!

வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 8 நாட்களாக குறைக்கப்பட்டு வந்த போதும், இன்னும் ஒரு ரூபாய் கூட

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

சென்னை: வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 8 நாட்களாக குறைக்கப்பட்டு வந்த போதும், இன்னும் ஒரு ரூபாய் கூட குறையாத அவல நிலை தொடர்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பொதுத் துறை நிறுவனங்களே தினசரி அடிப்படையில் நிர்ணயித்து வருகின்றன. இதனிடையே, கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மாற்றம் செய்யாமல், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து 19 நாள்கள் நிறுத்தி வைத்திருந்தன. கர்நாடக பேரவை தேர்தல் முடிந்ததும், கடந்த 14-ஆம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை அந்த நிறுவனங்கள் தினந்தோறும் உயர்த்தி வந்தன. 

இந்நிலையில், மே 13-ஆம் தேதி முதல் மே 29- ஆம் தேதி வரை தொடர்ந்து 16 நாட்கள் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 80 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 38 காசுகளும் உயர்த்தப்பட்டது.

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததால் வாகன ஓட்டிகள், விவசாயிகள், வர்த்தகர்கள், வியாபாரிகள் என நடுத்தர மக்கள் மீது பெரும் சிரமத்திற்கு உள்ளானர்கள். பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். பலதரப்பட்ட அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வந்தனர். 

இதையடுத்து கடந்த 8 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 8 நாட்களாக குறைக்கப்பட்டு வந்த போதும், இன்னும் ஒரு ரூபாய் கூட குறையாத நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை 12 காசுகளும், டீசல் விலை 8 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. மே 13 ஆம் தேதி முதல் மே 29 ஆம் தேதி வரை தொடர்ந்து 16 நாட்கள் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 80 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 38 காசுகளும் உயர்த்தப்பட்டது.

இன்றை பெட்ரோல், டீசல் விலை விபரம்:
பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.80.59 காசுகளாகவும், டீசல் விலையில் 8 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.72.56 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

இதனிடையே பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எந்த திட்டமும் இல்லை என்று பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.