நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது: ஆளுநர் மாளிகை அறிக்கை 

தமிழகத்தின் மாவட்டங்களில் ஆய்வு செய்ய அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

சென்னை: தமிழகத்தின் மாவட்டங்களில் ஆய்வு செய்ய அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆளுநர் தொடர்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருவது, மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களை ஆளுநர் ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் செயலாகும். 
இந்நிலையில் ஆய்வுப்பணிக்காக நாமக்கல் வரும் ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் கடந்த 22- ஆம் தேதி நாமக்கல் அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அப்போது ஆளுநரின் கார் மீது திமுகவினர் கருப்பு கொடிகளை வீசியும், கருப்பு பலூன்களை எறிந்தும் போராடினர். இதையடுத்து 192 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ஸ்டாலின் உள்ளிட்ட 1111 பேர் மீது கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதற்கு எதிராக மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநருக்கு மாநிலத்தில் ஆய்வு செய்ய அதிகாரம் கிடையாது. அதையும் மீறி ஆய்வு செய்தால் திமுகவின் போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் தனது அறிக்கையில், எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில், நாமக்கல்லில் ஆளுநர் ஆய்வு செய்தது குறித்து ஆளுநர் மாளிகை இரண்டாவது விளக்கம் அளித்துள்ளது. 
மாவட்டங்களில் ஆய்வு செய்ய அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்று மகாராஷ்டிரா சட்ட வல்லுநர் அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில், ஆளுநருக்கு ஒரு மாநிலத்தின் எந்த பகுதியிலும் முதல்வரின் அனுமதி இல்லாமல் ஆய்வு செய்ய அதிகாரம் இருக்கிறது என்றும் மக்களின் நலனுக்காக இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் செயல்பாட்டை ஆளுநர் விமர்சித்ததில்லை. இது தமிழக அரசுக்கு எதிரான ஆய்வு கிடையாது. ஏற்கனவே, ஆளுநர் அளித்த அறிக்கையில் அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது. 

ஆளுநருக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.