வைர நிறுவன ஊழியர்களுக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள சொகுசு கார்களை பரிசளித்து மகிழ்வித்த வைர வியாபாரி!

குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சோ்ந்த வைர வியாபாரி சாவ்ஜி தொலாகியா, தனது நிறுவனத்தில் பணியாற்றும் 3 ஊழியா்களுக்கு தலா ரூ.1
வைர நிறுவன ஊழியர்களுக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள சொகுசு கார்களை பரிசளித்து மகிழ்வித்த வைர வியாபாரி!

சூரத்: குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சோ்ந்த வைர வியாபாரி சாவ்ஜி தொலாகியா, தனது நிறுவனத்தில் பணியாற்றும் 3 ஊழியா்களுக்கு தலா ரூ.1 கோடி மதிப்புள்ள சொகுசு கார்களை பரிசளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சாவ்ஜி தொலாகியா, ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்டர் என்ற வைரக் கற்கள் ஏற்றுமதி நிறுவனத்தை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் நிலேஷ் ஜடா(40), முகேஷ் சந்த்பரா (38), மகேஷ் சந்த்பரா (43) ஆகிய மூவரும் 13-15 வயதில் வைரம் பட்டை தீட்டும் பணிக்குச் சேர்ந்தனர். தற்போது, 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இவா்கள், உற்பத்தி, மேற்பார்வை போன்ற முக்கியத் துறைகளின் தலைமை பொறுப்புக்கு உயா்ந்துள்ளனா்.

மூவரின் பங்களிப்பை பாராட்டி, மூவருக்கும் தலா ரூ.1 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ்-பென்ஸ் சொகுசு கார்களை சாவ்ஜி பரிசளித்துள்ளார். கார்களின் சாவியை மத்தியப் பிரதேச மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல், ஊழியா்களுக்கு வழங்கினார்.

பல கோடி ரூபாய் மதிப்புக்கு வா்த்தகம் செய்து வரும் சாவ்ஜி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றிய 1,716 ஊழியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தீபாவளி போனஸாக, 400 வீடுகளையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களையும் பரிசளித்தது ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, சொந்தமாக கார் மற்றும் வீடு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படவில்லை. நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செயல்திறன்களை ஊக்கப்படுத்துவதற்காக ஒரு ஆண்டுக்கு முன்பு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்தது.

2015-இல், 491 கார்களும், 200 அடுக்குமாடி வீடுகளும் ஊழியர்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்டர் நிறுவனத்தில் 5,500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com