ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையருக்கு கரோனா: மாநகராட்சி அலுவலகம் செல்ல ஒருவாரம் தடை
ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையாளருக்கு கரோனா உறுதியானதை தொடர்ந்து மண்டல அலுவலகத்திற்கு பொதுமக்கள் செல்ல ஒருவாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஈரோடு, ஆக 5: ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையாளருக்கு கரோனா உறுதியானதை தொடர்ந்து மண்டல அலுவலகத்திற்கு பொதுமக்கள் செல்ல ஒருவாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாவது கட்டமாக வேகமாக பரவி வருகிறது. மொத்த பாதிப்பில் 65 சதவீதம் ஈரோடு மாநகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு வந்துள்ளது.
இதனால் மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஈரோட்டில் நேற்று வரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 789 ஆக உள்ளது. இதில் 607 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 172 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாநகராட்சியில் நான்கு மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு உதவி கமிஷனர் நியமிக்கப்பட்டு பொறுப்பு வகித்து வருகின்றனர்.
கரோனா காலக்கட்டத்தில், மாநகராட்சி ஆணையாளருடன் இணைந்து மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 2-ம் மண்டலம் உதவி கமிஷனர் விஜயகுமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் இன்று காலை சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறும்போது, ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, ஈரோடு மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களுக்கு இன்னும் ஒரு வாரத்திற்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாராவது மனு கொடுத்து வந்தால் அவர்கள் அலுவலகம் வெளியே வைக்கப்பட்டுள்ள பெட்டியில் தங்கள் மனுக்களை போடலாம். மேலும், அலுவலகத்துக்கு வர முடியாத பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி மூலம் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...