மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அழகு நிலையம் சென்றதை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

பவானியை அடுத்த சித்தோட்டில் அழகு நிலையத்துக்கு சென்று வந்த மகளைப் பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News image
கோப்புப்படம்
Updated On :5 ஆகஸ்ட் 2020, 11:57 am

DIN

பவானி, ஆக. 5: பவானியை அடுத்த சித்தோட்டில் அழகு நிலையத்துக்கு சென்று வந்த மகளைப் பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்தோடு வாணியர் வீதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகள் அபிநயா (வயது 14). சித்தோடு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு  படிக்க உள்ளார். இவர், செவ்வாய்க்கிழமை அப்பகுதியிலுள்ள அழகு நிலையத்துக்கு சென்று வந்துள்ளார்.

கரோனா பரவல் அதிகரித்துக் காணப்படும் நேரத்தில் அழகு நிலையத்துக்கு சென்று வந்ததை அபிநயாவின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த அபிநயா வீட்டில் பாட்டி மற்றும் அத்தையிடம் தூங்க செல்வதாக கூறிச் சென்றவர், வீட்டின் அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு உள்ளார். 

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அபிநயாவை மீட்டு சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சித்தோடு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.