இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மேகமலை வனப்பகுதியில் கனமழை: சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேகமலை வனப்பகுதியில் தொடர்மழை காரணமாக  சின்ன சுருளி அருவியில்  வெள்ளிக்கிழமை  நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. 

News image
Updated On :7 ஆகஸ்ட் 2020, 9:17 am

DIN


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேகமலை வனப்பகுதியில் தொடர்மழை காரணமாக  சின்ன சுருளி அருவியில்  வெள்ளிக்கிழமை  நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. 

ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு பகுதியில்  சின்ன சுருளி அருவி அமைந்துள்ளது. வனச்சரகத்திற்குட்பட்ட இந்த அருவிக்கு கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கையாக  இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். மேலும் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாத காரணத்தால் அருவியில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. 

இந்நிலையில் மேகமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக  சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவியில் நீர்வரத்து வரத்து அதிகரித்துள்ளதால், சின்னசுருளி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை அடியோடு நீங்கியுள்ளது.

மேலும் அருவியில் குளிக்க தடை உள்ள நிலையில் அனுமதியின்றி வரும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுப்பாடுகளை மீறி  அருவியில் குளிக்கச் செல்லும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.