குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிராமசபைக் கூட்டம் ரத்து: கொ.ம.தே.க. கண்டனம்

கிராமங்களில் நடக்கும் பணி, நிதி ஒதுக்கீடு போன்றவற்றை மக்கள் அறியும் வகையில் நடக்கும் கிராமசபை கூட்டங்களை ரத்து செய்ததற்கு, கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்
Updated On :15 ஆகஸ்ட் 2020, 6:39 am

DIN

ஈரோடு: கிராமங்களில் நடக்கும் பணி, நிதி ஒதுக்கீடு போன்றவற்றை மக்கள் அறியும் வகையில் நடக்கும் கிராமசபை கூட்டங்களை ரத்து செய்ததற்கு, கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை, கிராமங்களில் நடக்கும் பணிகள், கிராமசபை கூட்டங்கள் நடக்கும்போதுதான் மக்களுக்கு தெரியவரும். அந்த ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி, எவ்வாறு நிதி செலவிடப்படுகிறது என்பதை சாமானியர்களும் அறிய கிராமசபைக் கூட்டம் வாய்ப்பாக உள்ளது.

தரமற்ற பணிகள் நடப்பதை சுட்டிக்காட்டவும், கேள்வி எழுப்பவும் வாய்ப்பாக அமைந்தது. முறைகேடுகளை மக்கள் அறியும் வாய்ப்பும் கிராமசபைகளில்தான் கிடைக்கும். முக்கியத்துவம் வாய்ந்த கிராமசபை கூட்டங்கள், சமூக இடைவெளியுடன் நடத்த அனுமதித்திருக்க வேண்டும்.

முதல்வர், அமைச்சர்கள் புதிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவது, முடிந்த பணிகளை திறந்து வைப்பதற்கு கூட்டம் வரவில்லையா? முதல்வர் ஆய்வு கூட்டங்கள் நடத்தும்போதும், மாவட்ட எல்லையில் வரவேற்பு கொடுக்க திரண்டு வருவதால் கரோனா பரவாமல் போகுமா? டாஸ்மாக்கை திறந்து விட்டு, மக்கள் கூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என அரசு தெரிவிக்க வேண்டும்.

பாசனத்துக்கு அணைகளில் நீர் திறக்கும் இடங்களில், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பலரும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் அதிமுக கட்சி கூட்டங்கள் கரோனா தொற்றுக்கு இடையே நடத்தப்படுகிறது.

இதுபோன்று அரசு உள் நோக்கம் கொண்டு செயல்படுவதை நிறுத்த வேண்டும். அரசு கிராமசபை கூட்டத்தை ரத்து செய்திருப்பது கண்டனத்துக்குரியது. உடனடியாக தேதி அறிவித்து கிராமசபை கூட்டங்களை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.