கணபதிபாளையத்தில் துணை மின்நிலையம் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு
ஈரோடு மாவட்டம் அடுத்த கணபதி பாளையத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் துணை மின் நிலையத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.


ஈரோடு மாவட்டம் அடுத்த கணபதி பாளையத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் துணை மின் நிலையத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு 13.37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியதாவது: தமிழகத்தில் மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காத வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க., ஆட்சி காலத்தில் கடுமையான மின் வெட்டு நிலவியது. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பு ஏற்று, 2 மாதத்தில் மின் வெட்டு என்பது இல்லாத மாநிலமாக உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்தாண்டு மட்டும் 112 துணை மின் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் துவக்கப்பட்டுள்ள துணை மின் நிலையம் ஒரு மாத காலத்திற்கு சோதனை ஓட்டமாக செயல்படும். அது முடிந்த பின் முதல்வரால் திறந்து வைக்கப்படும், என்றார். மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் திட்டம் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது அல்ல. தி.மு.க., ஆட்சி காலத்திலும் இருந்தது. இது அரசின் கொள்கை முடிவு. இது பற்றி முதல்வர் தான் கூறுவார்.
அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இருமொழிக் கொள்கை தான் தமிழக அரசின் கொள்கை முடிவு. அது தான் எங்கள் லட்சிய பயணம். அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், அறிவொளி இயக்கத்தில், 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறையில் உருவாக்கப்படும் புதிய பணி வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது.
இடம் மாறுதல் வேண்டும். ஆனால் அவர்களுக்குள் குழு அமைத்து புரிந்துணர்வின் அடிப்படையில் இடமாறுதல் பெற்றுக் கொள்ளலாம். கவுன்சிலிங் நடத்தப்பட மாட்டாது.
அரசு பள்ளியில் அதிக அளவிலான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்தாண்டு கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.என தெரிவித்தார்.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி ராமலிங்கம் கே.எஸ்.தென்னரசு, பி.பி.சிவசுப்பிரமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கணபதி, சித்தோடு ஆவின் துணை தலைவர் குணசேகரன், சிந்தாமணி, தலைவர் ஜெகதீஷ், மாவட்ட கூட்டுறவு வங்கி துணை தலைவர் கேசவமூர்த்தி, முன்னாள் அமைச்சர் டீச் இராமசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன், கிட்டுசாமி, முன்னாள் எம்.பி. செல்வகுமார், சின்னையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...