யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ள நீதிமன்றங்களை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்  திறக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பவானியில் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:10 am

DIN

பவானி : கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ள நீதிமன்றங்களை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்  திறக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பவானியில் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க செயலாளர் வெ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன் கோரிக்கையினை விளக்கிப் பேசினார்

தமிழக அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டுள்ள நீதிமன்றங்களை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திறந்து வழக்காட அனுமதிக்க  வேண்டும். கடந்த ஐந்து மாதங்களாக நீதிமன்றங்கள் திறக்கப்படாததால் பாதிக்கப்பட்டுள்ள வழக்குரைஞர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் மற்றும் கடனுதவி வழங்கிட வேண்டும்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும். திடீரென குற்றவியல் சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களில் திருத்தம் செய்ய முனையும்,  சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், மூத்த வழக்குரைஞர் ஆறுமுகம் உள்பட திரளான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.