குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தேர்ச்சி அறிவிப்பு: ஈரோட்டில் முதல்வருக்கு அரியர் மாணவர்கள் நன்றிப் பதாகை!

அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு ஈரோட்டில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

News image
ஈரோட்டில் முதல்வருக்கு அரியர் மாணவர்கள் வைத்த நன்றிப் பதாகை
Updated On :27 ஆகஸ்ட் 2020, 9:16 am

DIN

ஈரோடு : அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு ஈரோட்டில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.                        

கரோனா தொற்று இப்போது  உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்துது வருகிறது.

இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கும் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர அனைத்துப் பருவ தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாகவும், அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.  

இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் பகுதியில் வாழ்த்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த வாழ்த்துப் பதாகையில் அரியர் மாணவர்களின் அரசனே, எந்நன்றி கொன்றார்க்கு உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு  என்ற திருக்குறளை எழுதி, ஐயா எடப்பாடியாரே நீர் வாழ்க, வாழ்க, இப்படிக்கு அரியர் மாணவர்கள் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த வாழ்த்து பதாகையை அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து, நின்று வாசித்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.