‘முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பதில் மகிழ்ச்சி’: கமல்ஹாசன்
முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பதில் மகிழ்ச்சி என்று தமிழக முதல்வரின் விமர்சனத்திற்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.


முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பதில் மகிழ்ச்சி என்று தமிழக முதல்வரின் விமர்சனத்திற்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
அரியலூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, கமல்ஹாசனின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் கூறுகையில்,
“70 வயதாகிறது. 70 வயதில் பிக்-பாஸ் நடத்திக் கொண்டிருக்கிறார். பிக்-பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? இதை பார்த்தால் ஊரிலுள்ள ஒரு குடும்பம்கூட நன்றாக இருக்காது.
நன்றாக இருக்கும் குடும்பத்தைக் கெடுப்பதுதான் அவருடைய வேலை. அந்த டிவி தொடரைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டு விடும், நன்றாக உள்ள குடும்பமும் கெட்டு விடும்.” எனத் தெரிவித்தார்.
இந்த விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் கமல்ஹாசன் வெளியிட்ட சுட்டுரை செய்தியில்,
முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...