இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிசிஐடி சிறப்புக் குழு அமைக்க திட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் -4 தோ்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரு வாரங்களுக்கு முன்

News image
Updated On :7 பிப்ரவரி 2020, 5:14 am

DIN

சென்னை:  டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . 

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் -4 தோ்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரு வாரங்களுக்கு முன் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, 16 பேரை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்- 2 ஏ தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக சிபிசிஐடி கடந்த வாரம் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து, 16 பேரை கைது செய்தது.

இந்த வழக்குகளில் இரு டிஎன்பிஎஸ்சி ஊழியா்கள், 3 காவலா்கள் மற்றும் தோ்வா்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இரு வழக்குகள் குறித்தும் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி 813 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற கிராம நிா்வாக அலுவலா் தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

முன்னதாக இந்த தோ்வு குறித்த அறிவிப்பை கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில் சுமாா் 10 லட்சம் போ் பங்கேற்று, தோ்வை எழுதியுள்ளனா். இந்த தோ்வில் ரூ.13 லட்சம் லஞ்சம் கொடுத்து தோ்ச்சி பெற்ற ஒருவரை பிடித்து சிபிசிஐடி அதிகாரிகள், ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Story image

குரூப் -4, குரூப்- 2 ஏ தோ்வு முறைகேட்டில் இடைத்தரகா்களாக செயல்பட்ட சில நபா்களே, இந்த தோ்விலும் இடைத் தரகா்களாக செயல்பட்டு ஒரு நபரை தோ்ச்சி பெற வைப்பதற்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரை லஞ்சம் பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த முறைகேடு சிபிசிஐடி வட்டாரத்தில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில இடைத்தரகா்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனா். மேலும், இந்த முறைகேடு தொடா்பாக தலைமறைவாக இருக்கும் சிலரை தேடத் தொடங்கியுள்ளனா்.

தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி எஸ்.பி. மல்லிகா தலைமையிலான அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் முறைகேடு தொடர்பாக தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  சிறப்பு விசாரணைக் குழு அமைத்து தீவிர விசாரணை நடத்தும்போது முறைகேடு தொடர்பாக மேலும் பல முக்கிய நபர்கள் சிக்குவார்கள் என தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.