அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஜம்மு-காஷ்மீரில் கரோனா பலி எண்ணிக்கை 300 -ஆக உயர்வு

ஜம்மு-காஷ்மீரில் கரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 300 -ஆக அதிகரித்துள்ளது, தொற்று பாதிக்கப்பட்ட நான்கு பேர் சனிக்கிழமை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :25 ஜூலை 2020, 7:41 am

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் கரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 300 -ஆக அதிகரித்துள்ளது, தொற்று பாதிக்கப்பட்ட நான்கு பேர் சனிக்கிழமை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் வெள்ளிக்கிழமை மாலை வரை, கரோனாவுக்கு 16,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 9,217 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர், தொற்று பாதித்தவர்களில் 7,269 பேர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். 

இந்நிலையில், தொற்று பாதிக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் சனிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 300-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த நான்கு பேர்களில், மூன்று பேர் ஸ்ரீநகர் மாவட்டத்தையும், ஒருவர் பாரமுல்லாவையும் சேர்ந்தவர்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பந்திபோராவைத் தவிர காஷ்மீரின் ஒன்பது மாவட்டங்களில் ஜூலை 27 ஆம் தேதி காலை 6 மணி வரை பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது. 

தொற்றுநோயால் உலகம் அதன் மோசமான சவால்களை எதிர்கொண்டுள்ளதால், அனைத்து மத போதகர்களும் பிரார்த்தனை மற்றும் தியானம் போன்ற செயல்களில் அதிக நேரம் செலவிடவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.