ஈரோடு மாவட்டத்துக்குள் வர இபாஸ் கட்டாயம்: எஸ்.பி. தகவல்

ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய இ-பாஸ் கட்டாயம் என எஸ்பி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்துக்குள் வர இபாஸ் கட்டாயம்: எஸ்.பி. தகவல்
Published on
Updated on
1 min read


ஈரோடு: ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய இ-பாஸ் கட்டாயம் என எஸ்பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு எஸ்பி சக்திகணேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இம்மண்டலத்தை தவிர்த்து சென்னை உள்பட இதர மண்டலங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்குள் இ-பாஸ் இல்லாமல் எந்த வாகனங்களும் அனுமதிப்பது இல்லை. மீறி இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் யாரும் முகக் கவசம் அணியாமல் வெளியே வர கூடாது. மீறி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம். ஊரடங்கு நிபந்தனைகளை மீறுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com