காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கும்பகோணத்தை சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று வந்தது எப்படி ?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதியாகி இருப்பது இதுவே முதல் முறை.

News image
Updated On :28 மார்ச் 2020, 7:57 am

DIN


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதியாகி இருப்பது இதுவே முதல் முறை.

மேற்கிந்திய தீவில் உள்ள ஷிப்பிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்வர், கடந்த 16 ஆம் தேதி மேற்கிந்திய தீவில் இருந்து புறப்பட்டு கத்தார் வழியாக 18 ஆம் தேதி கும்பகோணம் திரும்பினார். இவருக்கு மார்ச் 22 ஆம் தேதி சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்ட்டுள்ளது. 

இதையடுத்து கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், பின்னர் மார்ச் 25 ஆம் தேதி தஞ்சாவூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையிக்கு மாற்றப்பட்டார். 

அங்கு இவரது ரத்தம் மற்றும் சளி பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருப்பதை அடுத்து, அவருடன் இருந்த உறவினர்கள் அவரை சந்தித்த நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் அவர் வசித்து வரும் தெருவில் உள்ளவர்களையும் வெளியே வர முடியாத அளவுக்கு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வெளி நபர்களும் இப்பகுதிக்குச் செல்ல முடியாத அளவுக்குத் தெரு முனையில் இரும்புத் தடுப்புகள்அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.