இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தில், தமிழகத்தில் பரவிவரும் கரோனா நோய் தொற்று பாதிப்பிலிருந்து மக்களை காத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. மேலும், அதற்கு தேவையான மருத்துவக் கருவிகள், செயற்கை சுவாச கருவிகள், முகக்கவசம், கையுறை, கிருமி நாசினிகள் உள்ளிட்ட தேவையான பொருட்களை அரசு மருத்துவமனைகளுக்கு வாங்கிடும் வகையில் வேலூர் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.ஒரு கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்திட பரிந்துரைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.