இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கார்க் அதிரடி அரைசதம்: சென்னைக்கு 165 ரன்கள் இலக்கு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில்  ரன்கள் எடுத்தது.

News image
பேர்ஸ்டோவை அவுட்டாக்கிய மகிழ்ச்சியில் சென்னை அணி வீரர்கள்
Updated On :2 அக்டோபர் 2020, 3:49 pm

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் களமிறங்கினர். தீபக் வீசிய முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோவ் ரன் ஏதும் எடுக்காமல் போல்டானார்.

அடுத்து களமிறங்கிய மணீஸ் பாண்டே, வார்னருடன் இணைந்து சற்று நிதானமாக ஆடினார். இந்நிலையில் வார்னர் 28 ரன்களில் அவுட்டானார், இவரைத் தொடர்ந்து பாண்டே 29 ரன்களிலும், வில்லியம்ஸன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின் களமிறங்கிய அபிஷேக், கார்க் அதிரடியாக விளையாட அணியின் ரன் சற்று வேகமாக உயர்ந்தது. இருப்பினும், அபிஷேக் 31 ரன்களில் அவுட்டானார்.

அதிரடியை தொடர்ந்த கார்க் 26 பந்துகளில் 51 ரன்களும் அப்துல் சமத் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தனர் ஹைதராபாத் அணியினர்.

இதன்மூலம் சென்னை அணி வெற்றி பெற 165 ரன்கள் இலக்காக நிர்ணியிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.