குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோட்டில் தமாகா சார்பில் பிரணாப் முகர்ஜி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி 

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று காலமானதையொட்டி ஈரோடு தாமாக சார்பில் அவருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
ஈரோட்டில் தமாகா சார்பில் பிரணாப் முகர்ஜி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி
Updated On :1 செப்டம்பர் 2020, 12:10 pm

DIN

ஈரோடு: இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று காலமானதையொட்டி ஈரோடு தாமாக சார்பில் அவருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று பிரணப் முகர்ஜி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உருவப் படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.

மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்கினார். மாநில துணை தலைவர் ஆறுமுகம்  மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரகுமார், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா  ஆகியோர் பிரணாப் முகர்ஜி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலிக் கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் பிரபாகர், வர்த்தக அணி செயலாளர் சின்னதுரை, பொதுச் செயலாளர் ராம் லட்சுமணன், விவசாயப் பிரிவு சம்பத், சிறுபான்மை பிரிவு தலைவர் முஜாகிதீன் அலி,  இளைஞரணி துணை தலைவர் மாயா வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.