இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ராகுல் அதிரடி சதம்: பெங்களூருக்கு 207 ரன்கள் இலக்கு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

News image
சதம் விளாசிய கே.எல்.ராகுல்
Updated On :24 செப்டம்பர் 2020, 3:52 pm

DIN

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இணைந்து வலுவான துவக்கம் கொடுத்தனர்.

பின் மயங்க் அகர்வால் 26 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுலுடன் இணைந்த நிகோலஸ் பூரன் 17 ரன்களில் அவுட்டானார்.

இதைத்தொடர்ந்து கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆடிய ராகுல் 69 பந்துகளில் 132 ரன்களும் கருண் 15 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பெங்களூரு அணி சார்பில் சிவம் துபே அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்ததன் முலம் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.