ஆந்திரத்தில் 1,901, கர்நாடகத்தில் 3,130 பேருக்கு கரோனா
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன

கோப்புப்படம்

கோப்புப்படம்
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.
ஆந்திரம்:
ஆந்திரத்தில் புதிதாக 1,901 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 8,08,924 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28,770 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 7,73,548 பேர் குணமடைந்துள்ளனர், 6,606 பேர் பலியாகியுள்ளனர்.
கர்நாடகம்:
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,130 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 42 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 8,05,947 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,19,558 பேர் குணமடைந்துள்ளனர், 10,947 பேர் பலியாகியுள்ளனர். 75,423 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...