காஞ்சிபுரத்தில் வழக்குரைஞர் கொலை: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்

காஞ்சிபுரத்தில் வழக்குரைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உண்மைக்குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அரசு தலைமை மருத்துவமனை முன்பாக செவ்வாய்க்கிழமை வழக்குரைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள் மற்றும் அழகரசனின் உறவினர்கள்
உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள் மற்றும் அழகரசனின் உறவினர்கள்

காஞ்சிபுரத்தில் வழக்குரைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உண்மைக்குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அரசு தலைமை மருத்துவமனை முன்பாக செவ்வாய்க்கிழமை வழக்குரைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரத்தை அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் அழகரசன் (வயது 40). சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து காரை கிராமம் செல்லும் வழியில் இவர் தனது நண்பர் சங்கர் என்பவருடன் பேசிக் கொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். தேசிய நெடுஞ்சாலையில், தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே நடந்த இத்தாக்குதலை தடுக்க முற்பட்ட அழகரசனின் நண்பர் சங்கரும் காயம் அடைந்தார்.

கொலை செய்யப்பட்ட தகவலறிந்து காஞ்சிபுரம் எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா, டி.எஸ்.பி. எஸ்.மணிமேகலை ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள். பின்னர் உடலை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர். வழக்குரைஞர் அழகரசன் நண்பர் சங்கரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார். உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை  நடத்தி வருகின்றனர். கொலை தொடர்பாக 3 பேரை காவல்துறை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிய வருகிறது.

வழக்குரைஞர்கள் சாலை மறியல்

வழக்குரைஞர் அழகரசன் கொலை செய்யப்பட்ட தகவலறிந்து அவரது நண்பர்கள் 50க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை முன்பாக சாலை  மறியலில் ஈடுபட்டனர். உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அதுவரை சாலை மறியலை கைவிட மாட்டோம் எனவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனை சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். உயிரிழந்த அழகரசனின் சடலம் உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது.

படவிளக்கம்..உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள் மற்றும் அழகரசனின் உறவினர்கள்,படம்}2.அழகரசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com