மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லை அருகே தலை துண்டித்து இளைஞர் கொலை

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் தலை துண்டித்து இளைஞர் திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டார்.

News image
நெல்லை அருகே தலை துண்டித்து இளைஞர் கொலை
Updated On :8 பிப்ரவரி 2021, 3:52 pm

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் தலை துண்டித்து இளைஞர் திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டார்.

தாழையூத்து பூலித்தேவர் நகரைச் சேர்ந்த பரமசிவன் மகன் கோழி என்ற சிதம்பரசெல்வன் (22). கூலித் தொழிலாளி. இவர், அடிக்கடி மது அருந்திவிட்டு அதே பகுதியில் உள்ள உறவினர்களின் வீடு முன்பு சென்று தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்நிலையில் திங்கள்கிழமை அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் மதுஅருந்த சென்றாராம். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் சிதம்பரசெல்வத்தை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ததோடு, தலையையும் துண்டித்து அப்பகுதியிலேயே போட்டுவிட்டு தப்பினர்.

தகவலறிந்ததும் தாழையூத்து காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை தலைமையில் காவலர்கள் அங்கு சென்றனர். தாழையூத்தி டிஎஸ்பி அர்ச்சனா நேரில் சென்று விசாரணை நடத்தினார். சிதம்பரசெல்வத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன்கள் பாலாஜி (39), ராமையா (37), சங்கரபாண்டி (40) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.  இவ்வழக்கு தொடர்பாக சுப்பையா, பால்துரை உள்பட மேலும் 3 பேரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.