சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

பிளஸ் 2 பொதுத்தோ்வு: அதிமுக உள்பட பல கட்சிகள் தேர்வு நடத்த ஆதரவு

பிளஸ் 2 பொதுத்தோ்வு நடத்துவதற்கு அதிமுக உள்பட 11 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 3:19 am

DIN

பிளஸ் 2 பொதுத்தோ்வு நடத்துவதற்கு அதிமுக உள்பட பெரும்பான்மையான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடா்பாக ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், கல்வியாளா்களின் கருத்துக்கள் பெறப்பட்ட நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கல்வி அலுவலா்கள், கல்வியாளா்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் கருத்தை கேட்ட அன்பில் மகேஷ் தற்போது சட்டப்பேரவை கட்சி பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில் அதிமுக சார்பில் முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 13 கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ள நிலையில், பாஜக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் அனைத்தும் தேர்வு நடத்த ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த கூட்டத்தில் தேர்வு நடத்தப்பட்டால், செய்யப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.