விளாத்திகுளம்: 30 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்; 8 பேரை கைது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கியூ பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு வேம்பார் கடற்கரையில் இருந்து 5 கடல்மைல் தொலைவில் கடலுக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும் படியாக சென்ற படகு ஒன்றை சுற்றிவளைத்து சோதனை செய்ததில் ஐந்து பாலித்தீன் பைகளில் 10 கிலோ எடையுள்ள கிரிஸ்டல் சிந்தடிக் எனும் போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 30 கோடி ரூபாய் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கியூ பிரிவு போலீசார் கிறிஸ்டல் சிந்தடிக் போதைப்பொருளை கைப்பற்றி கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவைச் சேர்ந்த பிரிட்டோ வாஸ் மகன் இருதய வாஸ் (43), அந்தோணி மகன் கிங் பேன் (25), பொம்மை மகன் சிலுவை (44), சிப்பிகுளம் ராஜ் மகன் அஸ்வின் (27), கீழவைப்பார் ஆல்வின் மகன் வினிஸ்டன் (24), ஜெபமாலை மகன் சுபாஷ் (26), சிலுவை மகன் கபிலன் (21), சார்லி மகன் சைமோன் (எ) சுக்கு (30) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு அண்மைகாலமாக போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதும் போலீசார் சுற்றி வளைத்து பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக வேம்பார் முதல் தருவைகுளம் வரையிலான கடல் பகுதியில் கடலோர காவல் படை போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியிருந்த போதிலும் 30 கோடி மதிப்பிலான போதைப்பொருள் வேம்பார் கடல் பகுதியில் கைப்பற்றப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...