அபுதாபியில் ‘மேட் இன் ரஷியா’ திருவிழா!

அபுதாபியில் ‘மேட் இன் ரஷியா’ திருவிழா நடைபெறவுள்ளதைப் பற்றி...
அபுதாபியில் வருகின்ற பிப்.21 முதல் பிப்.25 வரை ’மேட் இன் ரஷியா’ திருவிழா நடைபெறவுள்ளது.
அபுதாபியில் வருகின்ற பிப்.21 முதல் பிப்.25 வரை ’மேட் இன் ரஷியா’ திருவிழா நடைபெறவுள்ளது.
Published on
Updated on
1 min read

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் 'மேட் இன் ரஷியா’ திருவிழா மற்றும் கண்காட்சி வருகின்ற பிப்.21 முதல் 5 நாள்களுக்கு நடத்தப்படவுள்ளது.

ரஷிய கலாச்சாரம், பாரம்பரியம், மரபுகள் மற்றும் அதிநவீன தொழில்கள், அனைத்தையும் பொழுதுபோக்கான சூழலில் அமீரகத்தின் பொதுமக்கள் அனைவரும் காணும் நோக்கில் ரஷிய ஏற்றுமதி மையம் மற்றும் ரஷிய தூதரகத்துடன் இணைந்து அபுதாபி வர்த்தக மற்றும் தொழில்துறை சபையினால் இந்த திருவிழா நடத்தப்படவுள்ளது.

வருகின்ற பிப்.21 முதல் பிப்.25 வரையிலான 5 நாள்களில் அபுதாபியிலுள்ள யாஸ் தீவின் யாஸ் பே வாட்டஃப்ரண்டில் நடைபெறவுள்ள இந்த திருவிழாவிற்கு அனுமதி இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: உக்ரைனில் விரைவில் போர் நிறுத்தம்! பிரான்ஸ் வலியுறுத்தல்

ரஷியாவின் வடக்கு மாகாணங்களில் நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியமான மெஸேன் ஓவியங்கள் இந்த திருவிழாவில் அந்நாட்டின் முக்கியக் கலாச்சாரக் குறியீடாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரஷியாவைச் சேர்ந்த 10 முன்னணி அழகு சாதன நிறுவனங்கள் ஒன்றிணைந்து தங்களது தரம் வாய்ந்த அழகு சாதனப் பொருள்களை இந்த விழாவில் காட்சிபடுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த திருவிழாவில் ரஷியாவின் பிரபல கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. மேலும், இந்த விழாவின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வியாபாரம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளின் நிபுணர்களை ஒன்றிணைக்கப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com