மாநில அளவிலான அம்பு எறிதல் போட்டி: லிங்கா பள்ளி சாம்பியன்
சென்னையில், பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் நடைபெற்ற அம்பு எறிதல் போட்டியில் கிருஷ்ணன்கோவில், லிங்கா குளோபல் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.


சென்னையில், பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் நடைபெற்ற அம்பு எறிதல் போட்டியில் கிருஷ்ணன்கோவில், லிங்கா குளோபல் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான அம்பு எறிதல் போட்டி சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. கிருஷ்ணன்கோவில் லிங்கா குளோபல் பள்ளி மாணவர்கள் இப் போட்டியில் கலந்து கொண்டனர். 10 வயது குழுவில் இ.கவிஅமுதன், பி.எஸ்.சந்தோஷ் ஆகியோர் முதலிடத்தையும், கே.கெவின் ரக்ஷன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 14 வயது குழுவில் இ.ஸ்ரீசிவஹரி, ஆர்.ராஜமாரி ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றனர். 17 வயது குழுவில் எஸ்.பிரனேஷ் மூன்றாவது இடத்தையும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
முன்னதாக மதுரையில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு லிங்கா பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றனர்.
இதேபோன்று சிவகாசியில் நடைபெற்ற மாவட்ட உருளை சறுக்கு போட்டியிலும், மாவட்ட சதுரங்கப் போட்டியிலும் லிங்கா பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
இதேபோன்று கடந்த வாரம் சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற பொது அறிவு வினாடி-வினா போட்டியில் ஜூனியர் பிரிவில் லிங்கா குளோபல் பள்ளி மாணவர்கள் நரேன் கார்த்திகேயன், சுதாகர் ஆகியோர் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றனர்.
இவர்கள் அனைவருக்கும் பாராட்டு விழா புதன்கிழமை பள்ளியில் முதல்வர் அல்கா சர்மா தலைமையில் நடைபெற்றது. கலசலிங்கம் பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் பொன்னுப்பாண்டியன், கருப்பசாமி, ரத்னமணி ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...