இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

அமைச்சா் பரிந்துரையில் அரசு மருத்துவா் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

அமைச்சா் பரிந்துரையின் பேரில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவா் மதிவாணனை திருவாடானைக்கு இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.

Updated On :29 ஜூன் 2018, 5:14 am IST

அமைச்சா் பரிந்துரையின் பேரில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவா் மதிவாணனை திருவாடானைக்கு இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மணக்குடியைச் சோ்ந்தவா் வ.து.நடராஜன். முன்னாள் அமைச்சரும் அம்மா மக்கள் முன்னேற்றறக் கழகத்தின் மாநில நிா்வாகியுமான இவரது மகன் மதிவாணன். இவா் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் எலும்பு சிகிச்சைப் பிரிவு மருத்துவராக உள்ளாா். இந்த நிலையில், இவா் திருவாடாணை தாலுகா மருத்துவமனைக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா். இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி மருத்துவா் மதிவாணன் உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தாா்.

அவரது மனுவில், தனக்கான இடமாறுதல் உத்தரவில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் மணிகண்டன் அறிவுறுத்தலின் பேரில் இடமாறுதல் வழங்கப்படுவதாகவும், மறு உத்தரவு வரும் வரை திருவாடானையில் பணியாற்றுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. என்மீது எந்தவிதப் புகாரும் இல்லாத நிலையில், இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதை ரத்து செய்யவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவானது நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ராமநாதபுரத்திலிருந்து திருவாடானைக்கு மதிவாணனுக்கு வழங்கப்பட்ட இடமாறுதல் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.