ரூபாய் நோட்டுகளில் இனி காந்தி படத்துக்குப் பதிலாக வீர் சாவர்க்கர் படமா?

ரூபாய் நோட்டுகளில் இனி காந்தி படத்துக்குப் பதிலாக வீர் சாவர்க்கர் படமா?

இந்திய சுதந்திர போராட்டத்தில் வீர் சாவர்க்கரின் பங்கை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. குறைந்தபட்சம் அவரது புகைப்படத்தை இந்திய கரன்ஸி நோட்டுகளில் பயன்படுத்தியாவது 
Published on

புது டெல்லி, மே 29: அகில பாரத இந்து மகாசபையின் சார்பாக மத்திய அரசுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பப் பட்டுள்ளது. இனி ரூபாய் நோட்டுக்களில் மகாத்மா காந்தியின் படத்திற்குப் பதிலாக சமூக சீர்திருத்தவாதியும், சுதந்திரப் போராட்ட தியாகிகளில் ஒருவருமான வீர் சாவர்க்கரின் படத்தைப் பயன்படுத்தினால் என்ன? என அகில இந்திய இந்து மகாசபையின் தலைவரான ஸ்வாமி சக்ரபாணி கேள்வி எழுப்பியுள்ளார். அது மட்டுமல்ல, வீர சாவர்கரின் தியாகம் பாரத ரத்னா விருதுக்குத் தகுதியானதில்லையா? அவருக்கு இப்போதாவது பாரத ரத்னா விருது கொடுத்து கெளரவிக்க வேண்டும் மத்திய அரசு எனவும் அவர் தனது விண்ணப்பத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் வீர் சாவர்க்கரின் பங்கை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. குறைந்தபட்சம் அவரது புகைப்படத்தை இந்திய கரன்ஸி நோட்டுகளில் பயன்படுத்தியாவது அவரது ஒப்பற்ற தியாகத்துக்கு நாம் மரியாதை செய்தாக வேண்டும். இந்தியாவில் இந்துத்வா என்ற வார்த்தையை உருவாக்கி அதை முதன்முதலில் பயன்படுத்தியவர்களில் முக்கியமானவர் வீர் சாவர்கர் எனும் வினாயக் தாமோதர் சாவர்க்கர். அவரது புகழ்பெற்ற சித்தாந்த நூலான "Hindutva: Who is a Hindu?" எனும் நூலில் இந்துத்வா குறித்து முதன்முதலில் எழுதியவர் வீர்சாவர்க்கர். என அகில இந்திய இந்து மகாசபையின் தலைமை, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com