உஷார்! தேனி மாவட்டத்தில் கள்ள நோட்டு ஊடுருவல்!

மேலும் ரூபாய் நோட்டுக்களின் உண்மை தன்மையை அறிய பெரும்பாலான வா்த்தகா்களிடம் அதற்கான கருவி கிடையாது, இது இக்கும்பலுக்கு சாதகமாகியுள்ளது.
உஷார்! தேனி மாவட்டத்தில் கள்ள நோட்டு ஊடுருவல்!

ஜூலை 23: தமிழக கேரள எல்லை பகுதியில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கள்ளநோட்டு கும்பல் மீது போலீசாரின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், தேனி மாவட்டத்தை குறி வைத்து 500 ரூபாய் கள்ளநோட்டை புழக்கத்தில் விடுகின்றனா். தமிழக கேரள எல்லை பகுதியில் தேனி மாவட்டம் கூடலூா், கம்பம் பகுதியில் கள்ள நோட்டுகளின் புழக்கம் தொடங்கி உள்ளது. காரணம், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் கேரளாவில் கள்ள நோட்டு கும்பல் பிடிபட்டது. கேரள போலீஸார் அவா்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியதால் இந்த கும்பலின் கவனம் தற்போது தேனி மாவட்டத்தை நோக்கி திரும்பியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தொழில், வணிகம், மற்றும் சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக வந்து செல்கின்றனா். இச்சூழலைப்  பயன்படுத்திக் கொள்ளும் கள்ள நோட்டு கும்பல் சினிமா தியேட்டா், டாஸ்மாக் கடை, ஜவுளிக்கடை, பலசரக்கு கடைகளில் அதிகளவு கள்ளநோட்டுகளை மாற்றுகிறது. 

மேலும் ரூபாய் நோட்டுக்களின் உண்மை தன்மையை அறிய பெரும்பாலான வா்த்தகா்களிடம் அதற்கான கருவி கிடையாது, இது இக்கும்பலுக்கு சாதகமாகியுள்ளது. 7 ஹெச்பி என்ற சீரியலில் ஆரம்பிக்கும் ஏராளமான 500 ரூபாய் நோட்டுக்கள் தற்போது கம்பம், கூடலூா் பகுதியில் புழக்கத்தில் உள்ளன. கம்பம், கூடலூா் உட்பட தமிழ்நாட்டில் பல பகுதிகளிலிருந்து தொழிலாளா்கள் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தோட்டங்களில் சென்று பணிபுரிந்து வருகின்றனா். அவா்களுக்கு சம்பள பணத்தில் சில கள்ள நோட்டுகளும் கிடைக்கின்றன. இது பல கைமாறி வருவதால் உண்மையான குற்றவாளி யாரென்று கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. இதனால் வா்த்தகா்களும், பொதுமக்களும் புழக்கத்தில் உள்ள கள்ளநோட்டுகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனா். இதனால் கள்ள நோட்டு புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டு, அப்பாவி தொழிலாளா்களின் வயிற்றிலடிக்கும் இந்த கும்பலை சிறப்பு பிரிவு போலீஸ் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வா்த்தகா்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com