தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கேரளத்தில் தங்கம் கடத்தல் வழக்கு: கே.டி.ரமீஸிற்கு ஆக.7 வரை என்.ஐ.ஏ. காவல்

கேரளத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் கைதான கே.டி. ரமீஸின் என்.ஐ.ஏ. காவல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
கேரள தங்கம் கடத்தல் வழக்கு: கே.டி.ரமீஸிற்கு ஆக., 7 வரை என்.ஐ.ஏ காவல்
Updated On :4 ஆகஸ்ட் 2020, 10:33 am

DIN

கொச்சி: கேரளத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் கைதான கே.டி. ரமீஸின் என்.ஐ.ஏ. காவல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கடந்த ஜூலை 12-ஆம் தேதி கே.டி.ரமீஸ் என்பவர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கே.டி.ரமீஸிற்கு ஜூலை 28-ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு என்.ஐ.ஏ. காவல் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றுடன் (செவ்வாய்க் கிழமை) அவரது என்.ஐ.ஏ காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து கொச்சியில் உள்ள சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது கே.டி.ரமீஸிற்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோருக்கு ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.