மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாஷிங்டன் நகரில் ராணுவம்: தீவிரமாகும் மக்கள் போராட்டம்

அமெரிக்காவில் தலைநகர் வாஷிங்டன் பகுதியில் ராணுவத்தைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன்.

News image
வெள்ளைமாளிகை முன் திரண்டுள்ள போராட்டக்காரர்கள்
Updated On :3 ஜூன் 2020, 9:02 am

DIN

அமெரிக்காவில் தலைநகர் வாஷிங்டன் பகுதியில் ராணுவத்தைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன்.

காவல்துறையினரால் கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஒரு வாரமாக அமெரிக்கா முழுவதும் போராட்டமும் வன்முறைகளும் தீவிரமடைந்து வருகின்றன.

பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் நடைபெற்றுவருகின்றன. சில உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன.

ஏற்கெனவே, வெள்ளைமாளிகை எதிரே இருக்கும் தேவாலயத்துக்கு வந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் புகைப்படம் எடுத்துக்  கொள்ளும்  நிகழ்ச்சிக்காக, அந்தப் பகுதியில் திரண்டிருந்த போராட்டக்காரர்களைக் கலைக்க  கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டன.

இந்த நிலையில் வாஷிங்டன் பகுதிக்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைநகர்ப் பகுதியில் ராணுவ தளங்கள் இருக்கும் பகுதிகளில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர், வாஷிங்டனில் அல்ல என்று அறிக்கையொன்றில்  பென்டகன் செய்தித் தொடர்பாளர்  ஜொனாதன் ராத் ஹாப்மன் தெரிவித்துள்ளார்.

"அதிஉயர் எச்சரிக்கை நிலையில்" ராணுவத்தினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர், ஆனால், போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ராணுவத்தினருக்கு உதவவில்லை என்றும் ஹாப்மன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.