
கடலூர்: நிவர் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதி, குடிசைகளில் தங்க வேண்டாம் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:
நிவர் புயல் காரணமாக மாவட்டத்தில் 233 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும். எனவே கடற்கரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் கண்டிப்பாக வீடுகளில் தங்க வேண்டாம். அவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வேண்டும்.
மாவட்டத்தில் 60 ஆயிரம் பேர் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 10 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சாப்பாடு வழங்கப்படுகிறது.
பல்வேறு ஊர்களில் இருந்து முதற்கட்டமாக 600 மின்சார பணியாளர்களும், கடலூர் நகராட்சிக்கு 50 துப்புரவு பணியாளர்கள் வந்துள்ளனர். தேவைக்கேற்ப கூடுதல் பணியாளர்கள் வரவழைக்கப்படுவார்கள்.
கிராமங்களில் குடிசையில் வசிப்போரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று ககன்தீப் சிங் பேடி கூறினார்.
மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி கூறுகையில், கடலோரப் பகுதிகளில் கடல்நீர் உள்புகும் அபாயம் உள்ளது. எனவே கடற்கரையோர கிராமத்தில் வசிப்போர் இரவில் வீட்டில் கண்டிப்பாக தங்க வேண்டாம்.
மேலும் புயல் தொடர்பான வதந்திகளை பொதுமக்களிடம் பரப்புக் கூடாது. தங்களது பகுதியில் உள்ள அரசு அலுவலர்களிடமே மக்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.