/

ஆகஸ்ட் 23 முதல் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: தமிழக அரசு அறிவிப்பு

10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

News image
ஆகஸ்ட் 23 முதல் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: தமிழக அரசு
Updated On :28 ஜனவரி 2024, 3:57 am

DIN

10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக நடப்பு கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை  வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பிறந்த தேதி மற்றும் பதிவெண்ணைக் பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.