தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தமிழகத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்

தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு தில்லியில் இருந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

News image
Updated On :17 பிப்ரவரி 2021, 12:11 pm

தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு தில்லியில் இருந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே ரூ.700 கோடி மதிப்பில் அமையவுள்ள இயற்கை எரிவாயு குழாய் இணைப்புத் திட்டத்தை தொடக்கி வைத்தார். 

ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி வரை 143 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்படவுள்ளது.

நாகப்பட்டினத்தில் ரூ.31,500 கோடி மதிப்பில் அமையவுள்ள காவிரிப் படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

சென்னை மணலி பெட்ரோலியம் நிறுவன கேசோலின் சல்பர் நீக்கப் பிரிவு திட்டத்தையும் காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ரூ.500 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட கேசோலின் சல்பர் நீக்க வளாகத்தின் மூலம் சுற்றுச் சூழல் மாசு குறையும் வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.