உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த ஒருவர் மதம் மாறி சின்னமனூரில் பிரியாணி மற்றும் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் தடைசெய்யப்பட்ட அல்-உம்மா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி சனிக்கிழமை காலை 5 மணியளவில் இருந்து சின்னமனூர் தேரடி பகுதியில் உள்ள அவரது கடையை மற்றும் சில பகுதிகளில் தேசிய புலனாய்வு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.