மிக்ஜம் புயல்...சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு கூடுதலாக குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம்

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்கென சென்னை, தாம்பரம்,ஆவடி மாநகராட்சிகளுக்கு கூடுதலாக மூத்த குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 
மிக்ஜம் புயல்...சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு கூடுதலாக குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம்

மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்கென சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு கூடுதலாக மூத்த குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிக்ஜம் புயல் திங்கள்கிழமை பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில் சென்னைக்கு வடக்கு வடகிழக்கில் சுமார் 100 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து 5.12.23 செவ்வாய்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு மூத்த குடிமைப் பணி அதிகாரியும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு குடிமைப் பணி அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத மழை பொழிவு ஏற்பட்டுள்ளதால்,புயல் கரையைக் கடந்த பிறகு உடன் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தவும், மழை நீர் விரைவில் வடிவதை உறுதி செய்யவும், வெளி மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கில் சிறப்பு பணிக்கென வரவழைக்கப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களின் பணியினை ஒருங்கிணைக்கவும், சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு களத்தில் பணிபுரிந்து வரும் குடிமைப் பணி அதிகாரிகளுடன் கூடுதலாகப் பின்வரும் மூத்த குடிமைப் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மண்டலங்களின் வாரியாக பெயர் மற்றும் பதவி கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் மற்றும் பதவி விவரம்:

1. கே.எஸ். கந்தசாமி,மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் டி.ஜெகந்நாதன், ஆணையர், வணிகவரித் துறை.

2. எஸ். திவ்யதர்ஷினி, மேலாண்மை இயக்குநர்,தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம்.

3. சந்தீப் நந்தூரி, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு அரசு தொழில் .வளர்ச்சிக் கழகம் மற்றும் தர்மேந்திர பிரதாப் யாதவ், அரசு முதன்மைச் செயலாளர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை

4. டாக்டர். எஸ். பிரபாகர்,திட்ட இயக்குநர், தமிழ்நாடு நகரப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்.

5. டாக்டர்.கே. விஜய கார்த்திகேயன்,இணை மேலாண்மை இயக்குநர், மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் ஜெ. குமரகுருபரன், செயலாளர், பள்ளிக் கல்வித் துறை

6. பி. கணேசன்,இயக்குநர், நகர ஊரமைப்பு இயக்ககம்

7. டாக்டர். எஸ். சுரேஷ் குமார், முதன்மைச் செயல் அலுவலர் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்.

8. எஸ். பழனிச்சாமி,மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் மற்றும் குமார் ஜயந்த், அரசுகூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை.

9. எம்.பிரதாப், துணைச் செயலாளர், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மற்றும் பூஜா குல்கர்னி,ஆணையர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை.

10. எஸ். அருண்ராஜ், நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு மிண்ணணு கழகம்

11. இ. சுந்தரவள்ளி, ஆணையர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ககன்தீப் சிங் பேடி,முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை.

12. ஏ.கே. கமல் கிஷோர், இயக்குநர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

13. எம்.எஸ். பிரசாந்த்,கூடுதல் இயக்குநர் (பொது) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

14. வி.ஆர். சுப்புலட்சுமி,இணை ஆணையர், வணிக வரித் துறை டாக்டர் தரேஷ் அகமது,  செயலாளர், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை

15. கொ. வீரராகவ ராவ், ஆணையர், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தாம்பரம் மாநகராட்சி மற்றும் ஜான் லூயிஸ், மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்

எஸ். நாகராஜன்,நில நிர்வாக ஆணையர், ஆவடி மாநகராட்சி, ஏ.சண்முக சுந்தரம், போக்குவரத்து ஆணையர், அன்சுல் மிஸ்ரா, உறுப்பினர்-செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்.

மீட்புப் பணிகள் மற்றும் பிற உதவிகளுக்கென 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1913, 25619206/207/208 (சென்னை மாநகராட்சி), 18004254355, 18004251600 (தாம்பரம் மாநகராட்சி) மற்றும் 18004255109ஐ (ஆவடி மாநகராட்சி) தொடர்பு கொள்ளுமாறும், இந்த எண்களைத் தொடர்புகொள்வதில் ஏதேனும் சிரமமிருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 102 மற்றும் 104-ஐ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com