குடியரசு நாள் அணிவகுப்புக்கு சுழற்சி முறையில்தான் அலங்கார ஊர்தி அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
குடியரசு நாள் அணிவகுப்பு நிகழ்வில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன. குஜராத், கர்நாடகா, கோவா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் உள்பட 15 மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு நாளன்று மாநில வாரியாக கலாசாராத்தை பிரதிபலிக்கும் விதத்தில் நடைபெறவுள்ள அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது.
இதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக அரசின் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் விளக்கம் அளித்துள்ளது. அதில், “குடியரசு நாள் : தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி.
à®à¯à®à®¿à®¯à®°à®à¯ தினம௠: தமிழà¯à®¨à®¾à®à¯ à®à®²à®à¯à®à®¾à®° à®à®°à¯à®¤à®¿ நிராà®à®°à®¿à®ªà¯à®ªà¯ à®à®©à¯à®±à¯ வதநà¯à®¤à®¿
— TN Fact Check (@tn_factcheck) December 22, 2024
2025ம௠à®à®£à¯à®à¯ à®à¯à®à®¿à®¯à®°à®à¯ தின விழாவிலà¯, தலà¯à®¨à®à®°à¯ à®à®¿à®²à¯à®²à®¿à®¯à®¿à®²à¯ வரà¯à®à®¨à¯à®¤à¯à®±à¯à®®à¯ நà®à®à¯à®à®¿à®©à¯à®± à®à®£à®¿à®µà®à¯à®ªà¯à®ªà®¿à®²à¯, தமிழà¯à®¨à®¾à®à¯ à®à®°à®à®¿à®©à¯ à®à®²à®à¯à®à®¾à®° à®à®°à¯à®¤à®¿ நிராà®à®°à®¿à®ªà¯à®ªà®à¯à®à®¤à®¾à®à®ªà¯ பரபà¯à®ªà®ªà¯à®ªà®à¯à®à®¿à®±à®¤à¯.
à®à®¤à¯ à®®à¯à®±à¯à®±à®¿à®²à¯à®®à¯ தவறான தà®à®µà®²à¯. 2025ம௠à®à®£à¯à®à¯â¦ https://t.co/IAPGNb8mkR pic.twitter.com/94bpBqH4B0
2025ம் ஆண்டு குடியரசு நாள் விழாவில், தலைநகர் தில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாக தகவல் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல்.
2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது. தில்லியில் குடியரசு நாள் அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும்.
ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது. 2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி அடுத்த 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும்.
ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது. வதந்தியைப் பரப்பாதீர்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டு விவகாரம்: செயலற்ற நிலையில் தவெக அரசு! ஆக. 3-ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் குடியரசு துணைத் தலைவா்

125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? அன்புமணி ராமதாஸ்

தமிழக காங்கிரஸ் தலைவா் பதவியிலிருந்து விலக முடிவு: செல்வப்பெருந்தகை தகவல்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



