“திமுகவின் மக்களவைத் தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும்”: கனிமொழி எம்.பி.

திமுகவின் மக்களவைத் தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
“திமுகவின் மக்களவைத் தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும்”: கனிமொழி எம்.பி.

திமுகவின் மக்களவைத் தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பல்வேறு கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தல் பணிக்குழுக்களை அமைப்பது, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தொகுதிப் பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தைக் குழு என பல்வேறு குழுக்களும் அமைக்கும் பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. 

மக்களவைத் தேர்தலையொட்டி திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுக் கூட்டம் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் அக்குழுவில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எம்.அப்துல்லா, அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா என பலர் கலந்து கொண்டனர். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தேர்தல் அறிக்கையை உருவாக்குவது தொடர்பாக மக்களின் கருத்துகளைப் பெற பல்வேறு பகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசும்போது, “நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்த தேர்தல் அறிக்கைக் குழு இன்று கட்சி அலுவலகத்தில் கூடியது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மீனவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், கல்வியாளர்கள் என பலதரப்பட்ட மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து அதன் பிறகு தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம். அதன் அடிப்படையில் முதலில் எந்தெந்த ஊர்களுக்குச் செல்வது எனும் பட்டியலை இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலுக்கான ஒப்புதலை முதல்வரிடம் பெற்ற பிறகு பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவு செய்யப்படும். தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து மக்களின் கருத்துகளைப் பெற இணைய முகவரி, வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். திமுகவின் மக்களவைத் தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும்” எனக் குறிப்பிட்டார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com