முதல்வருக்கு நன்றி, சின்னப்பிள்ளை நெகிழ்ச்சி!

தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என பத்மஸ்ரீ விருதாளர் சின்னப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கு நன்றி, சின்னப்பிள்ளை நெகிழ்ச்சி!
Published on
Updated on
2 min read

தன்னுடைய நீண்டநாள் கோரிக்கையை ஊடகத்தின் வாயிலாக வெளிக் கொண்டு வந்ததால் தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு வீடு ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என பத்மஸ்ரீ விருதாளர் சின்னப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் அழகர்கோயில் செல்லும் சாலையில் அப்பன்திருப்பதிக்கு அருகே அமைந்துள்ள பில்லுசேரி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை. இந்தப் பகுதி மக்களின் வேளாண் பணிகளில் கொத்துத் தலைவியாகச் செயல்பட்டு, களஞ்சியம் சுயஉதவிக்குழுக்களின் வாயிலாக அடித்தட்டு ஏழை மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் பெ.சின்னப்பிள்ளை.

முதல்வருக்கு நன்றி, சின்னப்பிள்ளை நெகிழ்ச்சி!
வாஜ்பாயே காலில் விழுந்த சின்னப்பிள்ளைக்கு மோடி திட்டத்தில் வீடு இல்லை - பத்மஸ்ரீ விருதாளர் கண்ணீர்!
முதல்வர் உத்தரவிட்டு ஒரு மணி நேரத்திற்குள் மதுரை கிழக்கு தாசில்தார் பழனிக்குமார், சின்னப்பிள்ளையை பில்லுசேரியில் உள்ள அவரது மகன் வீட்டில் சந்தித்து கூடுதலாக 380 சதுர அடி நில ஒதுக்கீட்டிற்கான பட்டாவை வழங்கினார்.
முதல்வர் உத்தரவிட்டு ஒரு மணி நேரத்திற்குள் மதுரை கிழக்கு தாசில்தார் பழனிக்குமார், சின்னப்பிள்ளையை பில்லுசேரியில் உள்ள அவரது மகன் வீட்டில் சந்தித்து கூடுதலாக 380 சதுர அடி நில ஒதுக்கீட்டிற்கான பட்டாவை வழங்கினார்.

இதன் காரணமாக கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனவரியில் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கையால் 'ஸ்த்ரீ சக்தி புரஷ்கார் - மாதா ஜீஜாபாய்' எனும் விருதைப் பெற்றதுடன், வாஜ்பாயே மகிழ்ந்து சின்னப்பிளையின் காலில் விழுந்து வணங்கி வாழ்த்துப் பெற்றார். அதன் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி பொற்கிழி விருதும், 2018 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி கையால் ஔவையார் விருதும், 2019 ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.

இந்த நிலையில் தனக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கப்பட்ட நிலையில் இதுவரை வீடு கட்டித் தரப்படவில்லை என்றும், இதனால் மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது என அவர் அளித்த பேட்டி தினமணி இணையதளத்தில் சிறப்புச் செய்தியாக வெளியானது.

முதல்வருக்கு நன்றி, சின்னப்பிள்ளை நெகிழ்ச்சி!
தினமணி இணையதள செய்தி எதிரொலி: சின்னப் பிள்ளைக்கு வீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
அன்றைய பிரதமர்  வாஜ்பாயே மகிழ்ந்து சின்னப்பிளையின் காலில் விழுந்து வணங்கி வாழ்த்துப் பெற்றார்.
அன்றைய பிரதமர் வாஜ்பாயே மகிழ்ந்து சின்னப்பிளையின் காலில் விழுந்து வணங்கி வாழ்த்துப் பெற்றார்.

இதனையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உடடினயாக 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் மதுரை-அழகர்கோவில் முதன்மை சாலையில் அப்பன்திருப்பதி அருகேயுள்ள திருவிழான்பட்டி என்ற ஊரில் 1 சென்ட் 380 சதுர அடி நிலத்தை ஒதுக்கீடு செய்து, இந்த மாதமே கட்டுமானப்பணிகள் அனைத்தும் நடைபெறும் எனவும் அறிவிப்புச் செய்திருந்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பை வெளியிட்டு ஒரு மணி நேரத்திற்குள் மதுரை கிழக்கு தாசில்தார் பழனிக்குமார், சனிக்கிழமை சின்னப்பிள்ளையை பில்லுசேரியில் உள்ள அவரது மகன் வீட்டில் சந்தித்து கூடுதலாக 380 சதுர அடி நில ஒதுக்கீட்டிற்கான பட்டாவை வழங்கினார். மேலும் தற்போது நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை கூறுகையில், 'எனக்கு என்று சொந்தவீடு எதுவும் கிடையாது. தற்போது என்னுடைய மூத்த மகன் சின்னத்தம்பிக்கு சொந்தமான இந்த வீட்டில்தான் வசித்து வருகிறேன். மிகவும் சிரமமான சூழலில் வீடு ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு ரொம்ப நன்றி என நெகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com