போதைப் பொருள் பழக்கம் எதிர்கால தலைமுறையினரை அழித்துவிடும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக போதைப் பொருள்கள் பரவலாக புழங்குவதாக ஏராளமான புகார்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
ஆளுநா் ஆா்.என்.ரவி
ஆளுநா் ஆா்.என்.ரவி

சென்னை: போதைப் பொருள்கள் பழக்கம் எதிர்கால தலைமுறையினரை அழித்துவிடும் என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,அண்மை

சமீபக்காலமாக தமிழகம் மற்றும் பிற இடங்களில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில் அத்தகைய சட்டவிரோதப் பொருள்கள் புழக்கத்தில் இருப்பதை பல்வேறு சம்பவங்களால் உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தில் பள்ளிகள், உயா் கல்வி நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகளில் போதைப் பொருள்கள் பரவலாக புழங்குவதாக ஏராளமான புகார்கள் கடந்த ஓராண்டாக என்னிடம் தெரிவித்துள்ளனர்.

சா்வதேச போதைப் பொருள் கடத்தலையும், நமது மாநிலத்தில் நடைபெறும் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய நபா்களை மத்திய உளவுத் துறை, புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை அமைப்புகள் கண்டறிந்து கைது செய்துள்ளன.

ஆளுநா் ஆா்.என்.ரவி
”சந்திரபாபு நாயுடு வெறும் பூஜ்ஜியம் மட்டுமே” -ஜெகன் மோகன் ரெட்டி சாடல்

இதுபோன்ற போதைப் பொருள்கள் பழக்கம் எதிர்கால தலைமுறையினரை அழித்துவிடும். எனவே, போதைப்பொருள்கள் பழகத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும்.

போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய புலனாய்வு அமைப்புகளும், மாநில நிா்வாகமும் மேற்கொண்டாலும், மற்றொருபுறம் பெற்றோரும், கல்வி நிறுவன நிா்வாகங்களும் இந்த விவகாரத்தில் தீவிர விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இதுபோன்ற போதைப் பொருள்களின் மீதான ஈா்ப்பிலிருந்து இளைய சமூகத்தினர் விலகி இருக்க வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com