1,400 கிலோ எடையில் பிரமாண்ட கோயில் மணி: நாமக்கல்லில் தயார் செய்த கலைஞர்கள்!

நாமக்கலில் 1,400 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கோயில் மணியை கலைஞர்கள் தயார் செய்துள்ளனர்.
நாமக்கல்லில் தயாரிக்கப்பட்ட 1,400 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கோயில் மணி.
நாமக்கல்லில் தயாரிக்கப்பட்ட 1,400 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கோயில் மணி.

நாமக்கல்: நாமக்கலில் 1,400 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கோயில் மணியை கலைஞர்கள் தயார் செய்துள்ளனர்.

நாமக்கல் முல்லைநகரில், ஆண்டாள் மெட்டல் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் கோயில்களுக்கான மணிகளை தயார் செய்வதில் கை தேர்ந்தவர்கள். அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான ஆர். ராஜேந்திரன், ஆர். காளிதாஸ் ஆகியோர் 25 பேர் கொண்ட தங்கள் குழுவினருடன் இணைந்து, கடந்த டிசம்பர் மாதம் அயோத்தி ராமர் கோயிலுக்கு 10 பெரிய ஆலய மணிகளையும், 36 கைப்பிடி மணிகளையும் தயார் செய்து குடமுழுக்கு விழா நாளன்று அங்கு அவற்றை ஒலிக்கச் செய்தனர்.

இந்த நிலையில், சேலம் அரியானூர் பகுதியில் உள்ள 1008 சிவலிங்கம் கோயிலுக்கு பிரம்மாண்ட மணி ஒன்றை தயாரித்து வழங்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பாக அங்குள்ள பிரபல தனியார் கல்லூரி நிர்வாகம் ஆர்டர் கொடுத்தது. ரூ.45 லட்சம் செலவில், 1,400 கிலோ எடையில் 80 சதவீத காப்பர், 20 சதவீத வெள்ளியம் ஆகியவற்றை கொண்டு, 20 கலைஞர்கள் ஒருங்கிணைந்து இந்த மணி தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டனர். 5 அடி உயரம், 4.50 அடி விட்டம் கொண்ட கோயில் மணியை தயாரித்து முடிக்தனர். மேலும், 30 கிலோ எடை கொண்ட மணி ஒலிக்க பயன்படுத்தப்படும் உருளை வடிவிலான கம்பி ஒன்றும் தயாரிக்கப்பட்டது. இந்த கோயில் மணி முழுவதும் சிவன், பெருமாள், நந்தி, வலம்புரி சங்கு ஆகியவற்றின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

நாமக்கல்லில் தயாரிக்கப்பட்ட 1,400 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கோயில் மணி.
ஏப். 10-ல் திமுக - அதிமுக ஒன்று சேரும்: அண்ணாமலை

இந்தக் கோயில் மணி ஞாயிற்றுக்கிழமை மாலை கிரேன் மூலம் தூக்கப்பட்டு லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டன.

கன்னியாகுமரியில் சூரிய உதயத்தின் போது ஒலிக்கும் வகையில் பிரமாண்ட மணியை தயாரித்து கொடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும், யாராவது ஆர்டர் கொடுக்க முன் வந்தால் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன் என கோயில் மணி தயாரிப்பில் ஈடுபட்ட தந்தை, மகனான ராஜேந்திரன், காளிதாஸ் ஆகியோர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com