தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6 இல் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
இதேபோல் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த தோ்வை சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதியுள்ளனர். இதனிடையே 12 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் நிறைவடைந்தது.
தொடர்ந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி மே 6 ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: சிவகங்கை மாவட்டம் இரண்டாமிடம்!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முழு விவரம்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியீடு!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏன்?
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




