மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

தேர்தல் பிரசார விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது
திருமாவளவன்(கோப்புப்படம்)
திருமாவளவன்(கோப்புப்படம்)

அரியலூர்: தேர்தல் பிரசார விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது என விசிக தலைவரும் சிதம்பரம் வேட்பாளருமான திருமாவளவன் தெரிவித்தார்.

அரியலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம் மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று விடும் என்கிற அச்சத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார்.

தொடக்கத்தில் இருந்தே தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அணுமுறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு சார்பாக இருக்கிறது.

திருமாவளவன்(கோப்புப்படம்)
கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

தேர்தல் பிரசார விவகாரங்களில் யார் மீதும் குற்றம் சுமத்தப்படுகிறதோ அவருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்ப வேண்டும்.

தோ்தல் பிரசாரத்தில் மோடி பேசிய பேச்சுக்கு அவரிடம் விளக்கம் கேட்க வேண்டிய தோ்தல் ஆணையம், மாறாக

அப்படி தோ்தல் பிரசாரத்தில் மோடி பேசிய பேச்சுக்கு அவரிடம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டிய தேர்தல் ஆணையம், மாறாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவுக்கு அனுப்பியது ஏன் என்று விளங்கவில்லை.

பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது.

தோ்தல் ஆணையத்தின் இந்த அணுகுமுறை ஒரு சாா்பாக, ஆளும் கட்சிக்கு சாதகமான அணுகுமுறையாக தோன்றுகிறது என திருமாவளவன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com