டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மா ஃபார்முக்குத் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு வலுசேர்க்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் லக்னௌ 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மா ஃபார்முக்குத் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு வலுசேர்க்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மாவிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாது. இருப்பினும், உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே இருக்க, ரோஹித்தின் சிறப்பான ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணிக்கு தேவைப்படுவதும் இதுபோன்ற ஆட்டமே. டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தால், பின்வரிசை ஆட்டக்காரர்கள் ஆட்டத்தை சிறப்பாக முடித்துக் கொடுப்பார்கள். தொடக்கம் சிறப்பாக அமைந்தால் இந்திய அணியால் 200 ரன்களுக்கும் அதிகமாக ஸ்கோர் செய்ய இயலும் என்றார்.
டி20 உலகக் கோப்பையில் வருகிற ஜூன் 5 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முந்தையப் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடியிருந்தால்... ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?

ரோஹித் சர்மா எப்போது விளையாடுவார்? மும்பை கேப்டன் பதில்!

மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike





